நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைமாமணி விருது 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால் கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ வேற எதிலும் நிறை – குறைகளை இன்று வரை வகுக்கப்படவில்லை.

2019 – 20ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கடந்த 2021 பிப்ரவரி 20-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாத பல நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதோடு அந்த விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ்களில் உறுப்பினர், செயலர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் ஏதுமில்லாமல், அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே 2021-ல் தகுதி அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் முந்தைய விசாரணையில் அரசு தரப்பில் 2019 – 20ஆம் ஆண்டு தகுதியானவர்களுக்கு தான் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதா ? என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து  இன்றைய நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணன் பிரசாத் அமர்வு முன்பு இந்த வழக்கு விசரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டார்கள். அதன்படி 2019 – 20ம் ஆண்டு தகுதியானவர்களுக்கு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா ?என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பின் தேர்வு குழுவை மாற்றி அமைக்கவும்,  அப்போது விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.