கொரோனா காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து செவிலியர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒப்பந்த முறையில் பணியாளர், செவிலியர்களுக்கு எல்லாம் தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இதை எதிர்த்து ஒப்பந்த செவிலியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

மக்களை தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார் போல பணியை வழங்கும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்ற ஒப்பந்தசெவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.