2019 – 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரி சமுத்திரம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 2019 – 2020 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்கள் கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார்.

அவசரகதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு மீது ஹை கோர்ட், 2019 – 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என  உத்தரவு பிறப்பித்துள்ளது.