அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கடிதத்தை அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சை இருந்து வருகின்ற நிலையில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டுமே இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பு கூறி வருகிறது.

இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது ஒரு புறமும்,  பன்னீர்செல்வம் தரப்பு மற்றொருபுரமும் இருந்து வருகிறது. இந்த இரட்டை தலைமை சர்ச்சை மீண்டும் கடிதம் மூலமாக தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அதிமுக அலுவலகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அந்த கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியிருந்தது. ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று கூறி அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த கடிதத்தை அதிமுக அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம்.