ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவது சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்த அடிப்படையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை அனுப்பி இருந்தது. இந்நிலையில் அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி இருந்தது.

ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் கிடையாது என அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் வாங்க மறுத்து திருப்பி அனுப்பித்தார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்த கடிதத்தை தபால் மூலமாக தேர்தல் ஆணையம் தற்பொழுது அனுப்பி இருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்த கடிதத்தை மீண்டும் அனுப்பி இருக்கிறார்.

இதிலும் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தற்பொழுது அந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவிகள் தான் தற்போது வரைக்கும் தேர்தல் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே அதை மையப்படுத்தி தான் அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தன்னுடைய விளக்கத்தை அளித்திருக்கிறார். இந்நிலையில் தபால் மூலமாக மீண்டும் அந்த கடிதம் என்பது  அஇஅதிமுக  தலைமை அலுவலகத்திற்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.