செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஒரு நேஷனல் பார்ட்டியா இருந்துட்டு அந்த விஷயத்தை நான் இப்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்த கேள்விக்கு பதிலாக நான் இதை சொல்ல விரும்புகிறேன். ஒரு தேசிய கட்சி 1967க்கு அப்புறம் தமிழ்நாட்டில் இன்னும் திரும்பி வர முடியாத நிலைமை.

இங்க ஸ்டேட் பார்ட்டி ஓட தோழமை வச்சுக்கிட்டு தான் நீங்க பொழைக்கிறீங்க. உங்க ஓட்டு இப்போ நான்கு பிரசன்ட்டோ, அஞ்சு பிரசன்ட்டோ கொறஞ்சிருச்சு. ஒரு தேசிய கட்சி இங்கிருந்து அதுக்கு  விளக்கம் கொடுங்க….  ஏன் குடுத்தீங்க ? நாங்க கொடுக்கல அப்படிங்கிறீங்க….

ஏரியா லாஸ் ஆனது காங்கிரஸ் கட்சியோட டைம்ல.   அத பத்தி பேச சொல்லுங்க…  கச்சதீவை என்ன சொல்றாரு ? நேரு அவர்களுடைய லெட்டரில்  அது ஒரு தொல்லை, அது ஒரு நொச்சு,  ஒரு நொச்சரிப்பு…  சீக்கிரத்தில் அது எங்க கையை விட்டு போயிடுச்சுன்னா நிம்மதின்னு சொல்றாரு…  அப்படி சொன்ன கூடிய நேரு உடைய லெட்டர் கூட நாங்க எடுத்துக்காட்டுறோம். அதே மாதிரி இந்திராம்மா இது ஒரு சின்ன பாறை. கல்பாறை தான். அத நம்ம கொடுத்துட்டா ஒன்னும் நஷ்டம் இல்லன்னு சொல்றாங்க…

அதற்கு அப்போது இருந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா ? இல்லைங்க…   அப்பவும் எதிர்ப்பு தெரிவிக்கல,  அதற்குப் பிறகு பொய் பிரச்சாரம் பண்றீங்க…  இத புரிஞ்சிக்கணும் என்பதற்காக தான் எடுத்து போடுற வெளியில…. ஏன் தேர்தலா? இல்லைங்க…  தேர்தல் இருந்தாலும்,  இல்லாட்டியும் சொல்ல வேண்டிய விஷயம் இது… தமிழ் மக்களுக்கு இதைப் பற்றிய உண்மை தெரியணும்… பொய் பிரச்சாரத்துக்கு கிளீயரா நாங்க ஆதாரப்பூர்வமா சொல்றோம் நீங்க சொல்றது பொய் என தெரிவித்தார்.