தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது. இதனால் அங்கிருந்த தடுப்பு சுவரில் பேருந்து மோதி 50 அடி பள்ளத்தில் தலைக்குப்பிற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு விபத்தில் படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஏற்காட்டில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய இணை மந்திரி எல். முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிந்து கொண்ட எல். முருகன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.