தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 நாளை முதல் மே 20ஆம் தேதி வரை www.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மே 27 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி ஐ டி வளாகம், தரமணி சென்னை 600113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.