துணி கடைக்கு துணி வாங்க சென்றால் மறக்காமல் கட்டப்பை கேட்பது வழக்கம். இன்றளவும் நம் வீட்டில் உள்ள பெண்கள், தாய்மார்கள் பெரும்பாலானோர் அதை பின்பற்றி வரும் நிலையில், இன்றைய இளைஞர்கள் பலரும் வெளியே ஷாப்பிங் செல்லும்போது அந்த கட்டப்பையை பயன்படுத்துவதற்கு கூச்சப்படுவது வழக்கம். ஷாப்பிங் பேக் என தனியாக பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் வேலையில், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் கடையின் கட்டப்பை ஒன்று ரஷ்யா வரை சென்றுள்ளது.

தமிழக மக்களிடையே பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் கற்று தமிழில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவர் தமிழ்நாட்டிற்கு சமீபமாக வந்திருந்த போது, இங்கிருந்த ஒரு நபர் பொருள் ஒன்றை அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கு அவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அதை சரியாக அவரிடம் கொண்டு சேர்ப்பதையே தமிழ் பேசும் ரஷ்ய இளைஞர் ஒரு வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கொடுக்கச் சென்ற பொருள் சரவணா ஸ்டோர் கட்டப்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் ரஷ்யா வரை தி லெஜெண்ட் அண்ணாச்சியின் கட்டப்பை சென்றுள்ளது. உண்மையாகவே அவர் லெஜன்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Asir Rahman (@tamil_in_russia)