டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய தமிழக முதலமைச்சர் விஜய்யோ அல்லது அவரது அமைச்சர்களோ, அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, முதல்வர் விஜய்க்கு ஆதரவாக மிகவும் ‘கிரிஸ்பி’யாகவும், காட்டமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார், அங்கிருந்து வந்த பிறகு என்ன நடந்தது என்று ஏன் யாரும் சொல்லவில்லை எனக் கேட்கும் விமர்சகர்களை நோக்கி, “முதலில் அந்த மீட்டிங்கை நடத்திக் கூட்டத்தைக் கூட்டினாரே பிரதமர் மோடி, அவர் உங்களிடம் வந்து பிரஸ் மீட் கொடுத்துப் பேசினாரா?” என்று ரங்கராஜ் பாண்டே மிகவும் ஆக்ரோஷமாக வினவியுள்ளார்.

​பிரதமரே பேசாத போது, அப்புறம் ஏன் முதலமைச்சர் விஜய்யை மட்டும் குறிவைத்து கேள்வி கேட்கிறீர்கள் என்று சாடிய பாண்டே, நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் என்ன பேசினார், பிரதமர் முன்னிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன கோரிக்கைகளை வைத்தார் என்பது குறித்த அவருடைய அதிகாரப்பூர்வ உரையின் நகல் (Speech Copy) அப்படியே ‘பப்ளிக் டொமைனில்’ பொதுவெளியில் வெளியாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை எடுத்துப் படித்துப் பார்த்தாலே அங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெளிவாகத் தெரியப்போகிறது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அதை விடுத்துவிட்டு, திட்டமிட்டு முதலமைச்சரையோ அல்லது அவரது அமைச்சர்களையோ உங்களால் கார்னர் செய்ய முடியாது என்றும், அவர்கள் மக்கள் பணிகளைச் சரியாகச் செய்கிறார்களா இல்லையா என்று மட்டும்தான் நாம் கேள்வி கேட்க முடியும் என்றும் கறாராகக் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் உங்களுடைய டைம்பாஸுக்காக தினமும் வந்து கேமரா முன்னாடி பேச வேண்டும் என்று அவசியம் இல்லை என ரங்கராஜ் பாண்டே விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை, தற்போது தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் களத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.