தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு புதிய தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் மாநிலம் புதிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய்யின் “குறைவாகப் பேசுங்கள், அதிகமாக உழையுங்கள்” என்ற கொள்கையின்படி செயல்பட்டு வரும் தவெக அரசு, தனது முதல் 100 நாட்களில் ஒட்டுமொத்தமாக ரூ.1,02,514 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு 1.21 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரே நாளில் மட்டும் ரூ.67,452 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் டெண்டர்கள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கக் கேட்கப்பட்ட கமிஷன் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, முழுக்க முழுக்க மக்கள் நலனை மையமாகக் கொண்ட வெளிப்படையான ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் கிண்டல்களுக்கு ஆளான தொழிற்துறையின் இளம் அமைச்சர் கீர்த்தனா, தனது கடின உழைப்பாலும் தொடர்ச்சியான சாதனைகளாலும் தமக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குச் செயலால் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
100 days. ₹1.02 lakh crore in investments. 1.21 lakh new job opportunities. This is the answer to everyone asking, “What has the TVK government achieved so far?”
Even as a young woman minister, Keerthana has once again proved the TVK style and our leader’s style: “Talk less,… pic.twitter.com/I89drVQPjo
— TVK Pulse (@TVKpulse) August 13, 2026
“>
முந்தைய ஆட்சியைக் காட்டிலும் வித்தியாசமான, வேகமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஒரு புதிய பொருளாதார அத்தியாயத்தைத் தவெக அரசு தமிழகத்தில் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
