அதிக நேரம் கைப்பேசியைப் பயன்படுத்தியதன் காரணமாக கடுமையான நரம்பு பாதிப்புக்கு உள்ளான மூத்த நடிகை ஷகீலா, அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதுத்குறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படுக்கையில் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு மணிக்கணக்கில் கைப்பேசியில் கேம்களை விளையாடுவதும், ரீல்ஸ் பார்ப்பதும்தான் தனது கழுத்து நரம்பு தீவிரமாகப் பாதிக்கப்படக் காரணம் என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். இந்தத் தவறான பழக்கத்தால் தாங்க முடியாத உடல்வலியை அனுபவித்த அவர், அதற்காகச் செய்த மருத்துவ சிகிச்சைக்கு சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கவலைத் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாகப் பேசிய அவர், மொபைல் போன் பயன்பாட்டைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்றும், சிறு குழந்தைகளைக் கைப்பேசியின் அதிகப்படியான திரை வெளிச்சத்திலிருந்தும் தள்ளி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

“>

 

இன்றைய டிஜிட்டல் காலத்தில் மணிக்கணக்கில் செல்போனைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட பலருக்கும் நடிகை ஷகீலாவின் இந்த அனுபவம் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.