சமூக வலைதளங்களில் ரீல் எடுக்கும் ஆர்வம் மக்களை எவ்வளவு தூரம் தள்ளுகிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். மெட்ரோ ரயிலில் ஸ்டண்ட் செய்து ரீல் எடுக்க முயன்ற ஒருவர், மேற்கூரையையே உடைத்து, சிரிப்புக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இப்படி ஒரு காமெடியாக இருக்கிறதே!” என்று சிரித்து, அதேநேரம் இதனால் ஏற்பட்ட பொதுச் சொத்து சேதத்தை எண்ணி கவலையும் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவில், மெட்ரோவில் பயணிகள் தத்தமது வேலைகளில் மூழ்கியிருக்க, ஒரு நபர் திடீர என்று எழுந்து, மேற்கூரையில் உள்ள கம்பியில் காலை மாட்டி, வௌவால் போல தொங்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது உடல் எடையைத் தாங்க முடியாமல், மெட்ரோவின் மேற்கூரை பேனல் உடைந்து, அவருடன் சேர்ந்து தரையில் விழுகிறது.
रील बनाने के चक्कर में क्या क्या कर
बैठते है लोग इसने तो मेट्रो छत की गिरा दी pic.twitter.com/CDuUMOWWSL— Meenu Khan🇮🇳 (@indianmeenukhan) September 6, 2025
இந்த காமெடி சம்பவத்தைப் பார்த்து, “மெட்ரோவை ஜிம் மாதிரி நினைச்சுட்டாரு போல!” என்று ஒருவர் கமெண்ட் செய்ய, “இந்த திறமையை படிப்புல காட்டியிருந்தா IAS ஆகியிருப்பார்!” என்று மற்றொருவர் கிண்டலடித்தார்.
மற்றொரு பயனர், “இனி மெட்ரோவில் டிக்கெட்டுடன் சேதாரத்துக்கு டெபாசிட் வாங்குவாங்க போல!” என்று வேடிக்கையாக எழுத, சிலர் இதுபோன்ற செயல்கள் பயணிகளின் பாதுகாப்பையும், பொதுச் சொத்தையும் பாதிக்கும் என விமர்சித்துள்ளனர்.
