தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாதி அடையாளத்துடன் ஐடி கார்டு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் இடையில் அப்படி ஐடி கார்டு ஏன் வழங்க வேண்டும் எனவும் அதற்கான காரணம் குறித்தும் கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஜாதி அடையாளத்துடன் ஐடி கார்டு வழங்குவதற்கான காரணத்தை கேட்டிருந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!
மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மாண்புமிகு அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!
மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும்… https://t.co/J8kfRvh5On
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) June 27, 2026
