தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் என்று மாரடைப்பால் 73 வயதில் மரணம் அடைந்தார். இவர் கிட்டதட்ட 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் மக்கள் மனதில் அவரது கதை அம்சம் நடிப்பு போன்றவைகள் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த பாக்கியராஜ் நேற்று முன்தினம் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டிருந்தார்.
#WATCH | இயக்குநர் பாக்யராஜ் கடைசியாக பங்கேற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமண விழா#ripbhagyarajpassessaway #Bhagyaraj #KushbooDaughter #News18TamilNadu pic.twitter.com/5Qxxdk5EmT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 27, 2026
அவர் இறுதியாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடிகர் சிரஞ்சீவி கூறும் போது நேற்று முன்தினம் நாங்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக பேசி சிரித்து செல்பி எடுத்துக் கொண்டோம். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை தற்போது வரை என்னால் நம்பவே முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் உங்களுடன் இருந்த வேடிக்கையான தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். மேலும் உங்களை நாங்கள் எப்போதும் மிகவும் மிஸ் செய்வோம் என்று உருக்கமாகவும் வேதனையுடனும் பதிவிட்டுள்ளார்.
