சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான நடன வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அப்படி ஒரு வயதான பெண் பாஜ்புரி பாடலுக்கு துள்ளலாக ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. இன்ஸ்டாகிராமில் sangeeta_mishra05 என்ற ஐடி மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோவை 4.3 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து, 18 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
அந்த பெண்ணின் உற்சாகமான நடனமும், முகத்தில் புன்னகையுடன் கூடிய தன்னம்பிக்கையும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேசி ஸ்டைலில் தொடங்கி, மாடர்ன் ஸ்டெப்ஸ் வரை அசத்திய அவரது ஆட்டம், ‘வயசு ஒரு தடையில்லை’ என்பதை நிரூபித்துள்ளது.
View this post on Instagram
குடும்ப விழாவில் பாஜ்புரி பாடல் ஒலிக்க, அவர் மேடையில் இறங்கி தனது நடனத்தால் அனைவரையும் மிரள வைத்தார். வீடியோவின் தொடக்கத்தில் இவர் இவ்வளவு அசத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் தனது இடுப்பை அசைத்து, துள்ளலுடன் ஆடத் தொடங்கியதும், அங்கிருந்த பெண்கள் உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் திகைத்தனர்.
“இந்த ஆண்ட்டி முன்னாடி எல்லாரும் ஃபெயில்,” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்ய, “பாஜ்புரி இண்டஸ்ட்ரிக்கு இவரை ஆடிஷன் எடுக்கணும்,” என மற்றொருவர் கிண்டலாகப் பதிவிட்டார். “திருமணம், பார்ட்டிகளுக்கு உயிர் கொடுக்குறது இப்படிப்பட்ட ஆண்ட்டிகள்தான்,” என பலரும் பாராட்டி, இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
