உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் 2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை காண 1.30 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்திய லெவன் :

ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (வி.கீ.),சூர்யகுமார் யாதவ்,  ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா லெவன் :

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.