11 ஆண்டுகளுக்கு முன் சச்சின் சாதனையை பாராட்டும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கரின் குறிப்பிடத்தக்க 100 வது சர்வதேச சதத்தை, இந்த அசாதாரண சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா ? என்ற கேள்வியை சல்மான் கான் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர் இந்த அறையில் இருக்கும் இளம் வீரர்களால் முடியும் என கூற, அதற்கு வாய்ப்பே இல்லை என சச்சினின் கூற்றுக்கு மறுத்தபடி சல்மான் பதிலளித்தார்.

அதை தொடர்ந்து பேசிய சச்சின் விராட், ரோஹித் போன்ற திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் எனது சாதனையை முறியடிப்பார்கள் என தெரிவிக்க, 11 ஆண்டுகளுக்குப் முன்பே விராட் கோலி தனது சாதனையை முறியடிப்பார் என்பதை சச்சின் கணித்துள்ளார் என பழைய வீடியோவான அதை குறிப்பிட்டு மீண்டும் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.