ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி காரணமாக யூனிட் டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் நாள் இதோ வந்துவிட்டது. ஆம், 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா 3வது முறை உலக கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மேலும் அகமதாபாத் மைதானத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் குவிந்துள்ளனர்.. நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய திரைகள் வைத்து போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே 2003 இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பழி தீர்க்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.  இதற்கிடையே ஃபரிதாபாத்தில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை (நவம்பர் 20) முதல் செவ்வாய் (நவம்பர் 21) வரை யூனிட் டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பள்ளியின் நோட்டீஸ்  சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.