நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அனைவரும் எதிர்பார்த்த உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தற்போதைய இந்திய வீரர் ஜடேஜாவுக்கு ஆர்வத்துடன் தமிழ் கற்பிக்கும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இன்று நடக்கும் போட்டியில் அடி அடின்னு அடிப்போம், நாங்க வின் பண்றோம். நாளைக்கு கப்ப தூக்கு என கொஞ்சும் தமிழில் ஜடேஜா பேசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.