உலகக்கோப்பை 2023-ல் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி தனது இறுதிப் போட்டியில் வெற்றியை பதிவு செய்வதற்காக போராடி வருகிறது.  முதலில் களத்தில் இறங்கிய கில்  மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிதானமாகவும், அதே சமயம் அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வந்தனர்.

இந்நிலையில்,  சுவாரசியமாக நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு  முதல் விக்கெட்டாக கில் அவுட் ஆகி செல்ல, அடுத்தபடியாக அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி  தற்போது களத்தில் இறங்கி உள்ளார். அவர் மைதானத்திற்குள் களம் இறங்கும் போது,  சமீபத்தில் வெளியான ஜெய்லர் திரைப்படத்தின் hukum பாடல் ஒலிக்கப்பட, ஆரவாரத்துடன் கூச்சலிட்டு விராட் கோலி-ஐ ரசிகர்கள் வரவேற்றனர்.