எனது புதிய தோற்றத்தை SK 21 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் போது பார்ப்பீர்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். தற்போது SK 21 படம் குறித்து  சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதில்,

SK 21 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். நீங்கள் என்னுடைய புதிய தோற்றத்தை  ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும்போது பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக தனது தலையை மறைத்து வைத்திருந்த சிவகார்த்திகேயன் அப்படி என்ன வித்தியாசமான தோற்றத்தில் இருக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே மிகுந்துள்ளது. மேலும் SK 21 படமானது இந்தியன் ஆர்மி குறித்து  இருக்குமென யூகிக்கப்பட்ட நிலையில்,  படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15 வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.