விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக முதன் முதலாக மக்கள் மத்தியில் பிரதிபலமானவர்தான் ராம் ராமசாமி. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார். அதன் பிறகு இவர், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் ஏடிகே உடன் சேர்ந்து காஸ்மோ தம்பி என்று ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார்.

அந்த ஆல்பம் பாடலில் அவருக்கு ஜோடியாக ரஷி  என்பவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷி பிரபாவோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  இதை பார்த்த ரசிகர்களோ ராம் அந்த ஆல்பம் பாடலில் தனக்கு ஜோடியாக நடித்தவரையே காதலித்து அகேர்ட் செய்து விட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் போஸ்ட்டை பார்த்த ஏடிகே ,”எல்லாம் சரி.. ரொம்ப நாள் அவ வீட்டுல தங்கிறாத” என கலாய்க்கும் வகையில் கமண்ட் செய்துள்ளார். கமண்ட்டை பார்த்த இணையவாசிகள் ராமை வறுத்தெடுத்து வருகிறார்கள்.