ஓ.பன்னீர்செல்வம், பண்ரூட்டி இராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோரிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக….

குற்றம் நடந்த போது கூட்டாக இருந்துவிட்டு, இப்போ உங்களுடைய  குற்றசாட்டை வைப்பது, எடப்பாடியில் அரசியல் செல்வாக்கை சரிக்கவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பண்ரூட்டி இராமச்சந்திரன்,

இல்ல.. இல்ல.. இதுல  எடப்பாடியா ? கடப்பாடியா ? என்கிற பிரச்சினையே அல்ல. இதுல என்ன பிரச்சனை ? குற்றம் நடந்திருக்கு… குற்றவாளிகளை கண்டுபிடிக்கணும். யார் குற்றவாளிகளை காப்பாற்றினார்கள் என்பதையும் கண்டுபிடிக்கணும் ? அந்த குற்றவாளிகளுக்கு தண்டனையை வாங்கி தரணும், இது ஒரு அரசினுடைய தலையாயக் கடமை என தெரிவித்தார்.

குற்றவாளிகளை காப்பாற்றியவர்கள் என்கிற இடத்துல யாரை சொல்லுறீங்க என செய்தியாளர்கள் கேட்ட போது, பண்ரூட்டி இராமச்சந்திரன்…. அது விசாரணையில் தானே தெரியும்.  குற்றம் செய்தவர் வந்து உங்க வீட்டில் வந்து மறைகின்றார் என்றால் ?   நீங்க காப்பாத்துனீங்கன்னு தானே அர்த்தம். குற்றவாளின்னு உங்களுக்கு தெரியனும் இல்ல.

குற்றம் நடந்திருக்கா இல்லையா ? குற்றம் நடந்திருக்கு. அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது யாரு ? நீங்களும்,  நானுமா ?  கண்டுபிடிக்கணும், அரசுதான் கண்டுபிடிக்கணும் என பண்ரூட்டி இராமச்சந்திரன் தெரிவித்தார்.