செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கின்றேன். மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கோர்ட்டில் வழங்கிய பிராமண பத்திரத்தில் சொல்லி இருக்காங்க. நம்ம டிஎம்கே பைல்ஸ் பார்ட் ஒன்னுல ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.

TR பாலு அவங்க எங்க இருக்கிறாங்க? TR பாலு அவருடைய மகன் எங்க இருக்காங்க? TR பாலு அவருடைய மருமகள் எங்க இருக்காங்க? மொத்தமாக 10,000 கோடி ரூபாய்க்கு மேல அந்த குடும்பத்தில் சொத்து வந்திருக்கு.. எப்படி வந்திருக்கு..? அப்படினு கூட நாம கேள்வியும் கூட எழுப்பி இருந்தோம்.

இந்த மாதிரி TR பாலு ஊழல் எவ்வளவு பண்ணாரு ? எப்படில்லாம் ஊழல் பண்ணாரு ? எவ்ளோ கப்பல் வைத்திருக்காரு ? சேது சமுத்திரத் திட்டம் மூலமாக எவ்வளவு சம்பாதிப்பதற்கு கிளம்பி இருக்கின்றார். எல்லாம் எனக்கு தெரியும்ன்னு கலைஞர் கருணாநிதி அவருடைய மகன் அழகிரி  அவர்கள்…. நான் சொன்ன அதே குற்றச்சாட்டு 2014 ஏப்ரல் சொன்னாங்க.

அதற்கு இதுவரை அழகிரி அவர்கள் மீது இவர் எந்த வழக்குமே தொடுக்கல. நாம சொல்லிருக்குறத ப்ரூப் பண்ணுறதுக்கு TR பாலு  அவருடைய குடும்பம் மொத்தமுமே கூண்டுல ஏறனும். வேற வேற காலகட்டத்துல மகன் உட்பட… குடும்பம் உட்பட… TR பாலு உட்பட கூண்டுல ஏறனும்.

டிஎம்கே பைல்ஸ் பார்ட்  – 2 வை பொறுத்த வரைக்கும் பினாமி பெயர்ல அவுங்க வாங்கியிருக்க கூடிய லேண்ட்… பினாமி பேர்ல வாங்கியிருக்க கூடிய நிறுவனங்கள் இதுயெல்லாம் பார்ட்  – 2 ல இருக்கு என தெரிவித்தார்.