அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதேபோன்று சென்னை ஆர்கே நகரில் இளைஞர் வெட்டி படுகொலை, மீஞ்சூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு, தண்டையார்பேட்டையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் படுகொலை என தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நாள்தோறும் கொலை, கொள்ளை, போதை பொருள் நடமாட்டம் போன்றவைகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் சட்டம்  ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தன் சுயநலத்திற்காக மட்டும் காவல்துறையை பயன்படுத்தாமல் பொதுமக்களின் நலனுக்காக காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும்தான் குற்றங்கள் குறையும். மேலும் இனியாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்விழித்தது தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.