பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவருக்கு சமீபத்தில் சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆயிஷாவுக்கு 7 வயது இருக்கும்போது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு அந்த சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் செயற்கை இதயத்துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. அதன் பிறகு உடல் நலம் தேடி சொந்த நாட்டுக்கு திரும்பி ஆயிஷாவுக்கு மீண்டும் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் மாதம் அவர் மீண்டும் சென்னைக்கு வந்தார். அவர் நிதி நெருக்கடியால் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அவருக்கு இலவசமாக இதை அறுவை மாற்று சிகிச்சை செய்ய முன்வந்துள்ளது. அவர் மாற்று இதயத்துக்காக காத்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அவருக்கு இதயம் கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த 61 வயது முதியவரின் இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார்.

அவர் விரைவில் பாகிஸ்தான் திரும்ப இருக்கிறார். இது தொடர்பாக ஆயிஷா கூறியதாவது, எனக்கு அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அரசாங்கத்திற்கு மிகவும் நன்றி. நான் மீண்டும் நிச்சயம் ஒருநாள் இந்தியா வருவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஆயிஷாவின் தாயார் சனோபர் கூறியதாவது, என்னுடைய மகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு பாகிஸ்தான் பெண்ணுக்குள் ஒரு இந்திய இதயம் துடிக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு போதும் சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஆனால் இது நடந்திருக்கிறது என்று கூறினார்.