நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், பலவகைப்பட்ட வகையில் நாம் பாதிக்கப்பட்டு விட்டோம்ங்க …  இனிமேலும் ஒண்ணுமே இல்ல. இன்னும் கொஞ்ச காலத்தில் இவங்க அள்ளிட்டு போற….  டிப்பர் லாரி போற மண்ணையும், மணலையும், அந்த கல்லையும் – கல் குவாரிகளில் இருந்து கொண்டு மலையை உடைத்து கொண்டு போற கல்லை எல்லாம் பார்த்தா இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் வாழலாம் இந்த பூமியில… அதுக்கு மேல இந்த பூமியில் வாழவே முடியாது. அப்படிப்பட்ட கொடூர நிலமையைத்தான் இவங்க உருவாக்கி வச்சிருக்காங்க…

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த  எம்எல்ஏ, ஒரு சட்டமன்ற உறுப்பினர் கல்குவாரி நடத்துறார், கல்லூரி நடத்துறார்,  மருத்துவமனை நடத்துகிறார். இன்னும் இருக்கக்கூடிய…  வருமானம் கூடிய அனைத்து துறைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.  இவர் எப்படி மக்களுக்கு சரியான அரசியல் செய்வார். அரசு மருத்துவமனையினுடைய லட்சணத்தை பாருங்கள்.  ஒரு பச்சிளம் பிள்ளை அதனுடைய உடல் சரியில்லை அப்படிங்கிறதுக்காக கொண்டு போய் வச்சது,  ஒரு கையை எடுத்து அனுப்பிச்டாங்க. அப்படிப்பட்ட ஒரு சூழல் தான் இன்னைக்கு… 

மிக மோசமான ஒரு சூழல். நீங்க அரசாங்கத்தை கேள்வி எழுப்ப முடியாது. எப்படி கேள்வி எழுப்பினாலும்,  நமக்கு சரியான பதில் கிடைக்காது. உண்மையிலேயே தூய்மையான- நேர்மையான -நல்ல அரசியலை லஞ்சம் – ஊழலற்ற – நேர்மையான – நிர்வாகத்தை பெண்களுக்கான சுதந்திரத்தை – வாழ்வியலை மன நிம்மதியோடு நிறைவான வாழ்க்கையை பெற வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியினுடைய விவசாய சின்னத்துக்கு வாக்கு செலுத்துங்கள்,  வலிமை தாருங்கள்…  எளிய மக்களின் அதிகாரம் வெல்லட்டும் என பேசினார்.