ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பாராம்.

ஒருமுறை அந்த பையன் ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டிருக்கிறான். அப்போது ரஜினி கொஞ்சம் பொறு விக்கை கழற்றிவிட்டு வருகிறேன் என கூறினாராம். அதற்கு அந்த பையன் நீங்கள் விக் இல்லாமல் இருந்தால் எங்கள் ஊரில் ரசிக்கமாட்டார்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து விக்கோடு போட்டோ எடுத்தாராம்.