கொடநாடு கொலை வழக்கை  பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு அரசு  தீவிர விசாரணை தொடங்கி, டைவர்ட் பண்ண பாக்குறாங்க என சொல்லி, கடந்த வருடம் சட்டமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்து, அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்கேற்றீங்க, இப்போ திருப்ப கொடநாடு  கேஸ்ல தீவிர விசாரணை பண்ண மாட்டேங்குறாங்க என சொல்லி இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், 

நம்ம ஆட்சி மாறி,  திமுக ஆட்சி வந்திருச்சு. எதிர்க்கட்சியாக இருக்கும் போது திரு. ஸ்டாலின் அவர்கள் கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து,  நாட்டு மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் என்று வாக்குறுதி தந்துள்ளார். இப்போ அவர் ஆட்சி வந்திருச்சு.. அவர் ஆட்சிக்கு வந்து 2 ½ வருஷம் ஆச்சு, அதில் சிறு அளவு கூட முன்னேற்றம் இல்லையே என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது.  இதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி,  அரசினுடைய பணியை   துரிதப்படுத்த வேண்டும்.

அன்னைக்கு இருந்த சூழ்நிலை, அந்த மாதிரி இருந்துச்சு . இன்னைக்கு  இருக்கிற சூழ்நிலை மிகவும் கால தாமதமாக இருக்கு. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் ? என்பதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கொடநாடு வழக்கில் குற்றவாளிகைளை கண்டுபிடிக்க எடப்பாடியிடம் வலியுறுத்த வேண்டியதை வலியுறுத்தினோம், எனக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என ஓபிஎஸ் கூற,

ஓபிஎஸ் அணியில் உள்ள பண்ரூட்டி ராமசந்திரன், குற்றங்கள் நடந்தால் அதை கண்டுபிடித்து குற்றவாளிகளை தண்டிப்பது அரசனுடைய கடமை. குற்றம் நடந்திருக்கு, அந்த குற்றத்தை கண்டுபிடித்து… குற்றவாளிகள் யார் ? என்று கண்டுபிடிப்பதற்கு ஏன் இந்த தமிழ்நாடு அரசு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் இன்றைக்கு இருக்கிற பிரச்சனை. ஏற்கனவே ,முதலமைச்சராக இருந்தவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உங்களுக்கு விவரம் வேண்டுமானால் ..?

நீங்கள் அவரிடத்திலே அணுகி கேளுங்கள். அதை துணை முதலமைச்சராக இருந்த ஒருங்கிணைப்பாளரிடத்திலே கேட்பது சரியல்ல,  அதை தெளிவுபடுத்தி விட்டார். காவல்துறையை வைத்திருந்தது அன்றைய முதலமைச்சர் என தெரிவித்தார்.  மேலும் காவல்துறை கட்டுப்பாட்டில்  இருந்து தான் குற்றங்களை கண்டுபிடிக்கிற கடமை வருகிறது. ஆகவே அவர்தான் அதற்கு பொறுப்பு. அந்த பொறுப்பை அவர் காலத்திலே நிறைவேற்றவில்லை என்றால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பவோம். ஆகையினால் தெளிவாக இருக்கிறோம்,  அவர் செய்யவில்லை என்றால் ..?

அதற்கு என்ன காரணம் ? விரிவாக இன்றைக்கு அதைப் பற்றி காவல்துறையின் மூலம் விசாரிக்கும் போது   எல்லாவற்றையும் அவர்கள் தெளிவாக ஆராய்ந்து பார்த்து இந்த குற்றம் நடந்திருக்கிறது, இவர்களெல்லாம் குற்றவாளிகள், இந்த குற்றவாளிகளுக்கு  யார் யார் காப்பாற்றினார்கள்? அதற்கு என்ன பலன் அடைந்தார்கள் என்ற முழு விவரங்களையும் அவர்கள் உடனடியாக ஆராய்ந்து தந்து,  நாட்டு மக்களுக்கு தங்களுடைய பதிலை தரவேண்டிய பொறுப்பும் கடமையும் இன்றைய அரசுக்கு இருக்கிறது என பண்ரூட்டி ராமசந்திரன் தெரிவித்தார்.