இந்தூர் நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கையில் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய பையுடன் வந்த காணொளி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Sometimes it’s hard to believe that our Champ @imVkohli is 37 years old! 😅 pic.twitter.com/2qgzNbUnFz
— ViratGang.in (@ViratGangIN) January 17, 2026
தற்போது இந்தூர் நகரின் சில பகுதிகளில் குடிநீர் மாசு காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோலி தனது சொந்த உபயோகத்திற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர குடிநீர் பாட்டில்களைக் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தனது தங்கும் அறையில் நிறுவி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்தூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாசு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் விளையாட்டு வீரர்களின் இந்த அதீத விழிப்புணர்வு ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
