இந்திய கிரிக்கெட் உலகில் தற்போதைய ஹாட் டாபிக் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தான். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
தற்போது இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்குத் தயாராகி வரும் வேளையில், வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பாகவே, அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ரகசியமாக லண்டனுக்குப் பறந்து அங்குள்ள ஒரு முன்னணி கோடீஸ்வர தொழிலதிபரைச் சந்தித்திருப்பது உலக கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
மேலும் மகனுக்காகத் தனது விவசாய நிலங்களையெல்லாம் விற்று, ரத்தமும் சதையுமாக உழைத்த அந்த தந்தை, இங்கிலாந்துப் போட்டிக்கு முன்பே ஏன் அங்கு சென்றார் என்ற கேள்விக்கு பின்னால் ஒரு மாஸ்டர் பிளான் ஒளிந்துள்ளது.
இதனால் தனது மகனுக்கு உலகத்தரம் வாய்ந்த அதிநவீன பயிற்சிக் கூட வசதிகள், இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் கிளப்களில் விளையாடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை இப்போதே உறுதி செய்யவே இந்த அதிரடி சந்திப்பு நடந்துள்ளது.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் அறிமுகமாக வாய்ப்புள்ள நிலையில், இங்கிலாந்து மண்ணிலும் அவரது எதிர்கால சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த பின்னணியில் இருந்து உழைக்கும் ஒரு தந்தையின் இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
