இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து ஐசிசி (ICC) அளிக்கும் அழுத்தங்களுக்குத் தாங்கள் பணியப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனையின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரைப் புறக்கணிக்கப்போவதாக வங்கதேசம் அறிவித்துள்ளதுடன், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை போட்டிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வங்கதேச அணியின் இந்த பிடிவாதமான நிலைப்பாட்டினால் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் பங்கேற்குமா என்பது தற்போது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
