சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,05,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14442 ரூபாய்க்கும், ஒரு சவரன் 115376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 240000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.