இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரிடையே வேடிக்கையான மோதல் ஏற்பட்டது.
Dhruv Jurel teasing Yashasvi Jaiswal after the practice session, and Jaiswal almost slapped him 😂😂
What do you think Dhruv Jurel said to trigger that reaction? pic.twitter.com/IXzdmiGp5e
— Sonu (@Cricket_live247) January 17, 2026
துருவ் ஜூரெல் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்ஸ்வால் அவரை அடிக்கப் பாய்ந்ததும் அதனை ஜூரெல் சிரித்தபடி தவிர்த்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால் மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடி அணியில் இடம்பிடித்த ஜூரெல் ஆகிய இருவருக்கும் இந்தத் தொடரில் இதுவரை விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அடுத்த இரண்டு போட்டிகளில் ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு அவர் நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
