பாகிஸ்தானைச் சேர்ந்த மத அறிஞர் முஃப்தி அப்துல் காவி, இந்திய நடிகை ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப் போவதாக வரும் வதந்திகளைக் குறிப்பிட்டு, தான் “அவரைத் திருமணம் செய்வேன்” என்று பேசியது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. “அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்களில் ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்து எனக்குச் செய்தி அனுப்புவார்” என்று வெளிப்படையாகக் கூறிய அவர், ஒரு முஸ்லிம் அல்லாத பெண்ணைத் திருமணம் செய்வது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், ஐஸ்வர்யா ராயை முதலில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, அவருக்கு ‘ஆயிஷா ராய்’ என்று பெயர் சூட்டுவேன் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகை ராக்கி சாவந்துக்கு இவர் திருமண முன்மொழிவு வைத்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராயைக் குறித்துப் பேசியது சமூக வலைதளங்களில் மீண்டும் கடும் விமர்சனங்களையும், நகைச்சுவைகளையும் கிளப்பியுள்ளது.