இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவிற்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இன்று (நவ. 27) காலை 10.26 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவலை வானிலை ஆய்வுத் துறையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்குத் தற்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரக் குடியிருப்பாளர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
National Tsunami Early Warning Center issued a white notice requesting residents of coastal areas advised to remain attentive for announcements following a 6.6 magnitude earthquake reported in northern Sumatra.#lka #SriLanka #Sumatra #Earthquake pic.twitter.com/mpjyApRVMD
— Thimira Nawod (@ImThimira07) November 27, 2025
“>
