ஹங்கேரி மற்றும் அமெரிக்காவில் இறந்துபோன மனிதர்களின் உடல்பாகங்களை மயானங்களில் இருந்தும், வேலை செய்யும் மருத்துவமனைகளில் இருந்தும் திருடி, அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டும், வீட்டில் பதுக்கியும் வைத்திருந்த இரண்டு கொடூர ‘சைக்கோ’ நபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள விபரம் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவதாக ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் 30 வயது வாலிபர் ஒருவர், கைவிடப்பட்ட மயானங்களைத் தோண்டியும், தான் வேலை செய்த மருத்துவமனையில் இருந்தும் மனித உடல்பாகங்களைத் திருடியதாக அந்நாட்டின் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சூட்கேஸுக்குள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித முகம், முகத் தோல், எலும்புகள், முழுமையான கீழ் கால் பகுதி, மூளை, கைகள், தலை, மண்டை ஓடுகள் மற்றும் ஒரு ஜாடியில் அடைக்கப்பட்டிருந்த இதயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசாரின் விசாரணையின் போது, தனக்கு மனித உடல்பாகங்கள் மீது அலாதி ஈர்ப்பு இருப்பதாகவும், அதனால் அந்த பாகங்களை விதவிதமாகச் சமைத்துச் சாப்பிட்டதாகவும் அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்து அதிர வைத்துள்ளார்.
இதேபோல் மற்றொரு சம்பவமாக, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 34 வயதான ஜொனாதன் கெர்லாக் என்ற நபர், அங்குள்ள பழமையான மயானத்தில் புகுந்து 26-க்கும் மேற்பட்ட கல்லறைகளை உடைத்து, 100-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள், காய்ந்துபோன கைகள், கால்கள் மற்றும் அழுகிய நிலையில் இருந்த இரண்டு மனித உடல்களைத் திருடித் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு ஹாரர் சினிமா பட பாணியில் மயானங்களை வேட்டையாடி, மனித உடல்களோடு விளையாடி வந்த இந்த இரண்டு சைக்கோ நபர்களையும் போலீசார் கூண்டோடு தூக்கி சிறையில் அடைத்துள்ள நிலையில், இந்த விபரீத செய்திகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்களைக் கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
