சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு வனவிலங்கு உயிரியல் பூங்காவில், கரடி வேடமிட்டு பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக ஆட்களை வேலைக்கு எடுக்கும் வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வேலைக்குத் தேர்வாவர்களுக்கு ஆண்டுச் சம்பளமாக 1,00,000 யுவான் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அந்தப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர், ஒரு கருப்பு கரடியைப் போல ஆடை அணிந்து கொண்டு, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களைத் தன் செய்கைகளால் ரசிக்க வைக்க வேண்டும் என்பதே இந்த வேலையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விசித்திரமான வேலைவாய்ப்பு செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி, நெட்டிசன்கள் மத்தியில் விவாதங்களையும் நகைச்சுவையான கருத்துகளையும் உருவாக்கியுள்ளது. விலங்கு போல நடித்துப் பார்வையாளர்களை ஏமாற்றுவதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதோடு ஒருபுறம் எழுந்தாலும், வெறும் கரடி வேடமிட்டு நடிப்பதற்கு இவ்வளவு பெரிய தொகையா எனப் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்தத் தனித்துவமான மற்றும் வேடிக்கையான வேலைவாய்ப்பு விளம்பரம் தற்போது இணையத்தில் ஒரு பெரிய டிரெண்டாக மாறியுள்ளது.