சீனாவின் அதிவேக புல்லட் இரயில்கள், பளபளக்கும் இரயில் நிலையங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்புகள் உலகளவில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோ, சீன இரயில்வேயின் மற்றொரு இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் ஒரு இந்திய யூடியூபர் சீனாவிற்கு பயணம் செய்தபோது, அங்குள்ள ஒரு சாதாரண இரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்து, அங்கிருந்த நிலைமைகளைப் படம்பிடித்துள்ளார். உலகிற்கு காட்டப்படும் பகட்டான விளம்பரங்களுக்கு மாறாக, அங்குள்ள சாதாரண மக்கள் பயணிக்கும் பெட்டிகள் எவ்வளவு மோசமாக உள்ளன என்பதை இந்த வீடியோ உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

“>

இந்த வீடியோவில், சீன இரயிலின் பொதுப் பெட்டியானது இந்திய இரயில்களை விடவும் மோசமான கூட்ட நெரிசலுடன் காட்சியளிக்கிறது. பயணிகள் அமர இடமில்லாமல் தரையிலும், கழிவறைக்கு வெளியேயும் அமர்ந்து பயணிப்பதைக் காண முடிகிறது.

இந்நிலையில் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதாகக் கூறிக்கொள்ளும் சீனாவின் இந்த எதார்த்த நிலை, இந்திய இரயில்வேயின் பொதுப் பெட்டிகளின் கூட்ட நெரிசலை விட மோசமாக இருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீனாவின் இந்த போலி ஆடம்பர பிம்பத்தை உடைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.