இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் 10 வயது தம்பி ஆஷிர்வாத் சூர்யவன்ஷி, உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 6 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் குவித்து அதிரடி இன்னிங்ஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதோடு, தற்போது அயர்லாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷியைப் போலவே, அவரது தம்பியும் பீகாரின் மோதிப்பூர் கிராமத்திலிருந்து மற்றொரு கிரிக்கெட் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.

சமஸ்திபூரில் நடைபெற்ற உள்ளூர் தொடரில் ரிஷப்-11 கங்காபூர் அணிக்காக விளையாடிய ஆஷிர்வாத், 119 பந்துகளில் 168 ரன்கள் குவித்து அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரது அண்ணன் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் குடும்பத்தினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.