பல வருடங்களாகத் தொடர்ந்த தங்களது போராட்டங்கள் மற்றும் கடுமையான இன்னல்களுக்குப் பிறகு, அருண் குமார் என்பவருக்குத் தமிழக அரசின் சார்பில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணையைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் அவர்கள் நேரில் வழங்கியுள்ளார். பல ஆண்டு கால நிராகரிப்புகளையும் வேதனைகளையும் தாண்டி, அவரது பெற்றோரின் தியாகத்திற்குச் சரியான பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள குடும்பத்தினர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சருக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mohamed Ashik (@abrokecollegekid)

இந்த அரசுப் பணியுடன் தனது இலக்கை நிறுத்திக் கொள்ளாமல், உயர்நிலைப் போட்டித் தேர்வுகளை எழுதி பெரிய அதிகாரியாக வேண்டும் என்பதே அருண் குமாரின் லட்சியமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, காரைக்குடியில் உள்ள புகழ்பெற்ற டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் அவருக்கு ஒரு வருடத்திற்கான கட்டணம் செலுத்தப்பட்டு மாலை நேர வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது அலுவலகப் பணிகளுக்கும் ஆன்லைன் போட்டித் தேர்வுப் பயிற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் வகையில் அவருக்குப் புதிதாக மேக்புக் (MacBook Neo) ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமான வேலைகளுடன் சேர்த்துத் தனது உயர் கல்வி மற்றும் எதிர்காலக் கனவுகளுக்காகத் தீவிரமாக உழைக்கத் தயாராகி வரும் அருண் குமாரின் இந்த வெற்றிக் கதை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையைக் கைவிடாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்துள்ள இந்த நிகழ்வு, பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.