
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். 2014-ல் டிஎம்கே யுபிஏல பார்ட்னரா இருந்த காலத்துல 5 மீனவர்களை இலங்கை தூக்கில ஏத்துனாங்க. முதன்முதலில் மோதி அய்யா பண்ணது என்னன்னா..? இலங்கை அரசோடு பேசி, அந்த தூக்கிலிடப்பட்ட 5 மீனவர்களை உயிரோட அவங்க அவங்க வீட்டுல கொண்டு வந்து இறக்கினார்.
பத்து ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் பற்றியும், கச்சத்தீவு பற்றியும் பிரதமர் மோடி எங்கேயாவது பேசி உள்ளாரா ? என்று அதிமுக கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
இது UPA ஆட்சி காலத்தில் 5 மீனவர்களை தூக்கிலிடப்பட்ட கேஸ். 2014 ல மோதி அய்யா வந்த உடனே அந்த அஞ்சு பேரையும் மீட்டு உயிரோடு கொண்டு வந்து, அவுங்களை அங்கையே ஜெயில வச்சுருவேன் அப்படி எல்லாம் சொல்லி கொண்டு இருந்தாங்க, இல்லைங்க… அவங்க உயிரோடு எங்க ஊருக்கு வரணும். எங்க ஊருக்கு வந்த பிறகு நாங்க அவங்க வீட்டுக்கு அனுப்புவேன், நீங்க விட்டுரனும்னு சொல்லி கூட்டு வந்தது மோதி ஐயா என தெரிவித்தார்.