சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோ, பெற்றோர் எப்படி ஒரு குழந்தையை அடிக்காமல், மிரட்டாமல் நல்ல பாதையில் நல்வழி நடத்துகிறார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வீடியோவில், தங்கள் மகன் பள்ளியில் ஒரு சிறுமியை அடித்ததற்காக தாய், தந்தை இருவரும், சத்தமிடாமல், வெறுப்பில்லாமல், ஆனால் ஒரு நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.
வீடியோவில், குழந்தையின் தந்தை மகனை அழைத்து, “பள்ளியிலிருந்து கம்ப்ளைன் வந்திருக்கு?” என கேட்க, குழந்தை உண்மையை ஒப்புக்கொள்கிறான். “நான் ஒரு பெண்ணை அடித்தேன். அவள் என்னை ஒன்றும் செய்யல, நானே அடிச்சேன், அது தப்புன்னு தெரியும்…” என்கிறான். இதையடுத்து, தந்தை மகனிடம் ஹீரோவும் வில்லனும் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் செயல் முறைகள் என்னவென்று விளக்குகிறார். பிறகு, தவறு செய்ததை உணர வைத்துக்கொண்டு, பள்ளிக்கு அழைத்துச் சென்று, சிறுவனை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்பாக மன்னிப்புக் கேட்க வைக்கிறார்.
View this post on Instagram
இந்த வீடியோவை @adwikpaul என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகள் மற்றும் பகிர்வுகள் பெற்றுள்ள இந்த வீடியோ மீது நெட்டிசன்கள் அபாரமான பாராட்டுகளை வழங்கி வருகின்றனர். “தந்தையின் மனநிலை இதைப் போல இருந்தால் தான் ஒரு குழந்தை எதிர்காலத்தில் நல்ல மனிதனாக வளர முடியும்” என ஒருவர் பதிவிட்டிருக்க, மற்றொருவர் “ஹீரோ உருவாக்குங்கள்… வில்லன்கள் இல்லாமலாகட்டும்” என பதிவிட்டு உள்ளார். இச்சம்பவம், பெற்றோரின் பொறுப்பும், பிள்ளைகளின் நற்குண வளர்ச்சிக்கும் இடையிலான உறவை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
