
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமத்தில் பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூர்ந்து போன பகுதிகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் செல்வம் தலைமை தாங்கி பேசியுள்ளார்.
மேலும் மாவட்ட தலைவர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆதிதிராவிடர் நல அதிகாரி இலக்கியா பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.