தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி  வருகின்ற காரணத்தினால் சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் பகுதியில் சமீப காலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. அதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் பகுதிகளையும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நபர்களையும் சம்பந்தப்பட்ட பகுதிகளின் போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.