கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வேலக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 11- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியரின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் முருகனை கைது செய்தனர்.