திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான  நீங்கள் தான், உங்க வாக்குச்சாவடியில்  இருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர் தான்  நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் பொறுப்பாளர்கள். அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. உங்களை நம்பித்தான் நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கம்பீரமாக நான் முழங்கிக் கொண்டிருக்கிறேன். அதே கம்பீரத்தோடு இன்னிலிருந்து நீங்களும் பொறுப்பாளர்களாக கடமையாற்ற வேண்டும்.

வெற்றி ஒன்றுதான் உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும். அந்த வெற்றியை அடைவதற்காக  வழிகளில் நீங்கள் மிகச் சரியாக போய்யாக வேண்டும்.  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற உங்களுக்குநிறைய கடமைகள் இருக்கிறது, அதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது முதல் பணி. வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்கு சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா ? யாராவது போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா ?  இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கா ? முழுசா சரிபார்க்கின்ற கடமை உங்களுடையது.

வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் – பரப்புரை மேற்கொள்வது,  நம்முடைய சாதனைகளை அவர்களிடம் எடுத்துச் செல்வது  இரண்டாவது பணி. வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்கள் எல்லாம் வாக்குப்பதிவு மையங்களுக்கு  வர வைப்பது மூன்றாவது பணி. இது மிக மிக முக்கியமான பணி. உங்க வாக்குச்சாவடியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களை நீங்கள் ஒவ்வொருதாரக சந்திச்சு, அந்த குடும்பத்தில் ஒருவரா  மாறனும் என தெரிவித்தார்.