தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாகத் தொடங்க உள்ளது. அதிகாலையிலேயே எழுந்து, வாசலில் வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டி மங்களகரமாகப் பொங்கலிடுவது தமிழர்களின் மரபு.
இந்த ஆண்டு தைப்பொங்கல் அன்று எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் செல்வம் பெருகும், வீட்டின் மகிழ்ச்சி பொங்கும் என்பது குறித்த ‘நல்ல நேரம்’ இதோ!
ஜனவரி 15-ம் தேதி (வியாழக்கிழமை) தைப்பொங்கல் அன்று, அதிகாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றொரு சிறப்பான முகூர்த்த நேரம் உள்ளது.
இந்த நேரங்களில் பானையில் பால் ஊற்றி ‘பொங்கலோ பொங்கல்’ என்று குலவையிட்டுப் பொங்கலிடுவது மிகுந்த நன்மைகளைத் தரும் என ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால், மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை ராகு காலம் இருப்பதாலும், மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம் இருப்பதாலும், அந்த நேரங்களைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
