தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல அதிரடிப் புகார்களைப் பொறிந்து தள்ளினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே சித்தாந்த முரண்பாடு இருந்தாலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது.

விஜய் திமுக வேண்டாம் என்று நினைக்கிறார் என்றால், அதற்கு மாற்றாக யார் வரவேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்” என அதிரடியாகக் கூறினார்.

மேலும், “சீமானை யாரும் லேசாக எடை போட வேண்டாம்; அவர் நாடாளுமன்றத் தேர்தலில் 8.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். தற்போது தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது,

இன்னும் 60 நாட்களில் இது 2 முனைப் போட்டியாக மாறும்” என அரசியல் கணிப்பை வெளியிட்டார். விஜய் கூட்டணிக்கு வருவது குறித்துத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும், தேமுதிக மற்றும் பாமக குறித்து நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.